தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடன் தொல்லை; பெண் தற்கொலை

கடன் தொல்லை; பெண் தற்கொலை

கடன் தொல்லை; பெண் தற்கொலை


ADDED : பிப் 04, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலை தேவைய்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது, 39, இவருக்கு சர்மிளா பானு, 33, என்ற மனைவியும், மூன்று ஆண் குழந்தைகளும் உள்ளனர். ரியாஸ் அகமது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களாக வேலையில்லாமல் இருந்ததால், வெளி நபரிடம் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடன் நெருக்கடி காரணமாக சர்மிளா பானு மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரியாஸ் அகமது வீட்டில் இல்லாத நேரத்தில், சர்மிளா பானு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us