/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிராமங்களில் வாட்ஸ் அப் குழு' விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
/
'கிராமங்களில் வாட்ஸ் அப் குழு' விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
'கிராமங்களில் வாட்ஸ் அப் குழு' விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
'கிராமங்களில் வாட்ஸ் அப் குழு' விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 20, 2025 12:28 AM

மேட்டுப்பாளையம்; வனத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கிராமங்கள் தோறும் வாட்ஸ் அப் குழு ஏற்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில், காரமடை அருகே காட்டு பன்றிகளை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயத்தை அழித்து மக்களை தாக்கும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுபவர்களை தொந்தரவு செய்யும் வனத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகளையும், மக்களையும் வனவிலங்குகளின் தாக்குதலில் இருந்து வனத்துறையினர் காப்பாற்றுவார்கள் என நம்பிக்கை இல்லை. வனத்துக்கு வெளியே வரும் காட்டுப்பன்றிகளை கொல்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்தால், அனைத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு வனத்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. வனத்துறையினரின் நடவடிக்கையை முறியடிக்க, கிராமங்கள் தோறும் வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, விவசாயிகளையும் பொது மக்களையும் அந்த குழுவில் இணைக்க வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் காளம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.