/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கலெக்டரிடம் முறையிட முடிவு
/
மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கலெக்டரிடம் முறையிட முடிவு
மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கலெக்டரிடம் முறையிட முடிவு
மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கலெக்டரிடம் முறையிட முடிவு
ADDED : ஜன 06, 2025 01:42 AM
கோவில்பாளையம் ;கீரணத்தம் ஊராட்சியை, கோவை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து கலெக்டரிடம் முறையிட ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் உள்ள கீரணத்தம் ஊராட்சி, கோவை மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு கீரணத்தம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக நேற்று முன்தினம் கீரணத்தத்தில் ஊர் கூட்டம் நடந்தது. இதில் கீரணத்தம், புதுப்பாளையம், எம்.ஜி.ஆர்.,நகர், பண்ணாரி அம்மன் நகர், சாம்பிராணி குட்டை பகுதி மக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து கிராம சபை கூட்டத்திலும், ஊராட்சி மன்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி அரசு அறிவித்தது, வருத்தம் அளிக்கிறது.
கீரணத்தம் ஊராட்சியாக தொடர வேண்டும் அல்லது பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
இதற்காக தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவை கலெக்டரிடம் நேரில் முறையிட முடிவு செய்யப்பட்டது.