ADDED : பிப் 20, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை ரயில் நிலையம் அருகே அரசு மருத்துவமனை 18.5 ஏக்கர் பரப்பிலும், அவினாசி சாலையில் 70 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லுாரியும் செயல்பட்டு வருகிறது. இளநிலை பிரிவில், ஆண்டுக்கு 200 பேர் வீதம் 1000 பேரும், முதுநிலை பிரிவில் 350 பேரும் படிக்கின்றனர்.
பி.எஸ்சி. கார்டியாலஜி, பி.எஸ்சி. ரேடியாலஜி உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளும் நடக்கின்றன. மாணவர்களுக்கு தங்கும் விடுதி இல்லை.
இப்போது இடம் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளனர். ஒப்புதல் வந்ததும் கட்டுமானம் தொடங்கும் என துணை முதல்வர் சுஜாதா தெரிவித்தார்.
