/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னியம்பாளையத்தில் சிக்னல் அமைக்க முடிவு
/
சின்னியம்பாளையத்தில் சிக்னல் அமைக்க முடிவு
ADDED : அக் 23, 2025 11:46 PM

சூலூர்: சின்னியம்பாளையத்தில் சிக்னல் அமைக்க, போக்குவரத்து போலீசார் முடிவு செய்து பணிகளை துவக்கி உள்ளனர்.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சின்னியம்பாளையத்தில், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்து வருவதால், மக்கள் ரோட்டை கடக்க முடியாமல் தவிக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும், யு டேர்ன் அகற்றப்பட்டதால், ஒரு புறத்தில் இருந்து மறு புறத்துக்கு செல்ல, வாகன ஓட்டிகள், ஒரு கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.
தினமும் அவதிக்குள்ளாகி வந்த மக்கள், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், சிக்னல் அல்லது யு டேர்ன் அமைக்க வேண்டும், என, கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் நியாயமான கோரிக்கையை அடுத்து கள ஆய்வு செய்த போக்குவரத்து போலீசார், சிக்னல் அமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பழைய சிக்னல் கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

