/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சிறப்பு முகாம்; வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்க முடிவு
/
தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சிறப்பு முகாம்; வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்க முடிவு
தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சிறப்பு முகாம்; வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்க முடிவு
தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சிறப்பு முகாம்; வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்க முடிவு
ADDED : நவ 11, 2024 06:43 AM
தமிழ் புதல்வன் திட்டத்தில் இணைந்த கல்லுாரி, பாலிடெக்னிக், அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்கள், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். ஆனால் அதை வங்கிக்கணக்கு எண்ணோடு இணைக்கவில்லை. மேலும் பான் எண்ணையும் இணைக்கவில்லை.
அதனால் அரசால் வழங்கப்படும் உதவித் தொகை சென்று சேருவதில் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட சமூகநலத்துறை தமிழ்புதல்வன் திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக்கணக்குடன் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க சிறப்பு முகாமை நடத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை பற்றியும் அதன் பலன்கள் குறித்தும் கிராமம், நகரம் என்று வேறுபாடு பார்க்காமல், விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதற்காக, 400 முகாம்களை நடத்தினோம். முகாம்களை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் தமிழ்புதல்வன் திட்டத்தில் பலர் இணைந்தனர். அதனால் தான் இத்திட்டத்தில் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக கோவை திகழ்கிறது.
இம்முகாம்களில் மாவட்ட சமூகநலத்துறையோடு, கல்லுாரி கல்வித்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, அரசு பொறியியற் கல்லுாரி ஆகியவை இணைந்து பங்கேற்றன. இதுபோன்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தற்போது ஆதார் மற்றும் பான் எண்னை வங்கிக்கணக்கோடு இணைக்காமல், 600க்கும் மேற்பட்டோர் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்காக அந்தந்த கல்லுாரியில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியோடு இணைந்து, சிறப்பு முகாமை நடத்த முடிவு செய்திருக்கிறோம். முகாம் நடக்கும் நாட்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இவ்வாறு, கூறினார்.
- நமது நிருபர் -