/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; கலெக்டர் அனுமதி பெற முடிவு
/
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; கலெக்டர் அனுமதி பெற முடிவு
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; கலெக்டர் அனுமதி பெற முடிவு
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு; கலெக்டர் அனுமதி பெற முடிவு
ADDED : பிப் 07, 2024 01:30 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில், குப்பை கொட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தின் வழித்தடம் அகலப்படுத்துவதை மக்கள் தடுத்து நிறுத்தினர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட, 7வது வார்டு கிரீன் கார்டன் பகுதியில் பாறை குழி உள்ளது. அங்கு, குப்பை கொட்ட புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் வழித்தடம் மற்றும் தடுப்புகள் அமைத்து குப்பை கொட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு, ஆட்சேபனை தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் பணிகளை தடுத்தனர். இதை தொடர்ந்து நேற்று அந்த இடத்தை சுத்தம் செய்யவும், வழித்தடத்தை அகலப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்ய சென்றனர்.
இதை கண்ட அப்பகுதி மக்கள், அந்த இடத்தை அகலப்படுத்தக்கூடாது, என, பொக்லைன் இயந்திரத்தை தடுத்தனர். போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் மக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மக்கள் பின்வாங்காததால், இந்த இடத்தை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம், பேரூராட்சி நிர்வாகம் முறையாக அனுமதி பெற்ற பின் பணிகளை மேற்கொள்ளலாம். அதுவரை, தற்காலிகமாக பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பணிகள் கைவிடப்பட்டது, மக்களும் கலைந்து சென்றனர்.

