/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு
/
இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு
இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு
இருகூர், காளப்பட்டி, மருதமலையில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க முடிவு
ADDED : ஜூலை 28, 2025 09:52 PM
கோவை; கோவை மாநகரின் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. மாநகராட்சியில் புதிதாக மதுக்கரை நகராட்சி, வெள்ளலுார், நீலாம்பூர் உள்ளிட்ட பேரூராட்சிகள், கீரணத்தம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பல பஞ்சாயத்துகள் இணைக்கப்பட உள்ளன. இதனால் வார்டுகள் எண்ணிக்கை 100ல் இருந்து 150 ஆக உயரும்.
எனவே, கோவைக்கு மேலும் மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
''மாநகராட்சி எல்லைக்கு பொருத்தமாக, மாநகர போலீஸ் எல்லைகளையும் விரிவுபடுத்த வேண்டும்.
''அந்த அடிப்படையில் இருகூர், காளப்பட்டி, மருதமலை ஆகிய மூன்று இடங்களில் போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
''ஒவ்வொரு  ஸ்டேஷனிலும் ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு எஸ்.ஐ. உட்பட, 30 போலீசார் வேலை செய்வார்கள்,'' என உயர் அதிகாரிதெரிவித்தார்.