/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைக்கு மனநோய் பாதிப்பு தடுக்க கர்ப்பிணி தாய்மார்களுக்கு 'கவுன்சிலிங்' அங்கன்வாடி மையங்களில் துவக்க முடிவு
/
குழந்தைக்கு மனநோய் பாதிப்பு தடுக்க கர்ப்பிணி தாய்மார்களுக்கு 'கவுன்சிலிங்' அங்கன்வாடி மையங்களில் துவக்க முடிவு
குழந்தைக்கு மனநோய் பாதிப்பு தடுக்க கர்ப்பிணி தாய்மார்களுக்கு 'கவுன்சிலிங்' அங்கன்வாடி மையங்களில் துவக்க முடிவு
குழந்தைக்கு மனநோய் பாதிப்பு தடுக்க கர்ப்பிணி தாய்மார்களுக்கு 'கவுன்சிலிங்' அங்கன்வாடி மையங்களில் துவக்க முடிவு
ADDED : அக் 18, 2025 11:38 PM
கோவை: கோவை மாவட்ட சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில், மாவட்ட மனநலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநோய் சார்ந்த சிகிச்சைகள், 'கவுன்சிலிங்' வழங்கப்படுகிறது. தற்கொலை, தேர்வு பயம் உள்ளிட்ட பிரிவுகளில் வரும் அழைப்புகளுக்கு தற்போது ஆலோசனை வழங்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, குழந்தைகளிடம் மனநல பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, கருவில் உள்ள குழந்தைகளின் மனநலம் மேம்படும் வகையில், தாய்மார்களுக்கு பயிற்சி, வழிகாட்டுதல் அளிக்கப்படும்.
இவ்வழிகாட்டுதல் பயிற்சி, மாவட்ட மனநலத்திட்ட டாக்டர்கள் ஹெலனா செல்வக்கொடி, டாக்டர் கிருத்திகா ஆகியோர் இணைந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் மேற்கொள்ள உள்ளனர்.
மாவட்ட மனநலத்திட்ட டாக்டர் ஹெலனா செல்வக்கொடி கூறியதாவது:
ஐந்து வயது குழந்தைகளிடம் கூட மனநோய் அறிகுறியை காண்கிறோம். குழந்தைகளின் மனநலனை மேம்படுத்தி, எதிர்காலத்தில் மனநோய் பாதிப்பு ஏற்படாத வகையில், பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வழக்கமாக,அங்கன்வாடிகளில் மனநலம் சார்ந்த ஆலோசனை வழங்குவோம். சற்று தீவிர வழிகாட்டுதலுடன் குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பயிற்சி கர்ப்பிணிகளுக்கும்,தாய்மார்களுக்கும் அளிக்க உள்ளோம்.
கருவில் உள்ள குழந்தைகளின் மனநலம் தாயின் உணர்வுகள், செயல்பாடுகளுடன்இணைந்துள்ளது. கருவுற்ற 10 மாதங்கள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகளை சந்தித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.
குழந்தை எவ்வாறுவளர வேண்டும்; என்ன மனநிலையுடன் இருக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றார்களோ, அதுபோல், 10 மாதங்கள் தாய் நடந்து கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது, நல்ல எண்ணங்களுடன் இருப்பது அவசியம்.
ஏழாவது மாதம் முதல் சுற்றி இருப்பவர்கள் பேசுவது கருவில் உள்ள குழந்தைக்கு கேட்கத்துவங்கும். நேர்மறையான எண்ணங்களுடன் தாய், தந்தை, சுற்றத்தார் பேச வேண்டும்.
கருவிலேயே நல்ல மனநிலை மேம்பாடு ஏற்படுத்தினால், மனநல குறைபாடுள்ள குழந்தைகளின் பிறப்பும் குறைய வாய்ப்புள்ளது. நவ., முதல் அங்கன்வாடிகளில் இப்பணிகளை துவக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
குழந்தை எவ்வாறு வளர வேண்டும்; என்ன மனநிலையுடன் இருக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றார்களோ, அதுபோல், 10 மாதங்கள் தாய் நடந்து கொள்ள வேண்டும். புத்தகங்கள் படிப்பது, நல்ல எண்ணங்களுடன் இருப்பது அவசியம்.