ADDED : மார் 17, 2026 05:57 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கள் வரத்து குறைந்துள்ளது.
நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) --- 180, தேங்காய் (ஒன்று) --- 32, கத்தரிக்காய் கிலோ - 19, பூசணிக்காய், அரசாணிக்காய் மற்றும் சுரைக்காய் -- 15, முள்ளங்கி --- 13, முருங்கைக்காய் --- 25, வெண்டைக்காய் --- 40, பாகற்காய் --- 45, பீர்க்கங்காய் --- 30, புடலை, பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் --- 20, அவரைக்காய் - 58 மற்றும் பச்சை மிளகாய் - 50 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) --- 80, முருங்கைக்காய் மற்றும் பாகற்காய் கிலோ - 10, முள்ளங்கி -- 7, வெண்டைக்காய், பூசணிக்காய், அரசாணிக்காய், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் --- 5, புடலை -- 2, பீர்க்கங்காய் -- 20 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதே போன்று, சுரைக்காய் --- 3, அவரைக்காய் --- 8 மற்றும் பச்சை மிளகாய் --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை காட்டிலும் அனைத்து காய்கறிகளும் 200 கிலோ வரை வரத்து குறைவாக இருந்தது. வரத்து குறைந்த நிலையில், பெரும்பாலான காய்கறிகள் விலையும் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வரும் நாட்களில் காய்கள் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.

