/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருக்கல்யாண உற்சவம்; அம்மனுக்கு அலங்காரம்
/
திருக்கல்யாண உற்சவம்; அம்மனுக்கு அலங்காரம்
ADDED : ஏப் 24, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; காட்டூர் வி.ஜி., லே-அவுட்டில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பூச்சாட்டு, அக்னிக்கம்பம் ஆகியவற்றுடன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாளை திருவிளக்கு வழிபாடு மற்றும் சக்தி கரக வீதி உலா, 29ம் தேதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவம் மிக சிறப்புடன் நடக்க உள்ளது. அதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு, தேர் திருவிழா மற்றும் அன்னதானத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

