/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னியாண்டவர் கோவிலில் காய்,கனி, பூக்களால் அலங்காரம்
/
சென்னியாண்டவர் கோவிலில் காய்,கனி, பூக்களால் அலங்காரம்
சென்னியாண்டவர் கோவிலில் காய்,கனி, பூக்களால் அலங்காரம்
சென்னியாண்டவர் கோவிலில் காய்,கனி, பூக்களால் அலங்காரம்
ADDED : பிப் 11, 2025 11:54 PM

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அடுத்த சென்னி யாண்டவர் கோவிலில் நேற்று முன் தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, தைப்பூச அபிஷேக, அலங்கார பூஜைகள், தேரோட்டம் நடந்தது.
கோவில் முழுக்க, காய்கள், கனிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழைத்தார், இளநீர், கரும்பு மற்றும் அனைத்து விதமான காய்கள், பழங்கள், பூக்களை கொண்டு, பிரகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், அலங்காரத்தை கண்டு வியந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட காய்கள், மறு பூஜையன்று அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படும். பழங்கள், பூக்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும், என, கோவில் நிர்வாகிகள் கூறினர்.