/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திரப்பதிவு அலுவலகம் சோமனுாரில் இன்று திறப்பு
/
பத்திரப்பதிவு அலுவலகம் சோமனுாரில் இன்று திறப்பு
ADDED : ஆக 05, 2025 11:25 PM
சோமனுார்; சோமனுாரில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது.
சூலுார் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் அப்பநாயக்கன்பட்டி, இடையர் பாளையம், கண்ணம் பாளையம், கலங்கல், காங்கயம் பாளையம், சூலுார், பருவாய், போகம்பட்டி, வடவள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், பத்திர பரிவர்த்தனைகள் சூலுார் அலுவலகத்தில் மேற்கொண்டு வந்தனர். இதனால், சூலுார் அலுவலகத்தில், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், கருமத்தம்பட்டியில், புதிய பத்திரப்பதிவு அலுவலகம் துவக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்தது.
சூலுார் அலுவலகத்தின் கீழ் உள்ள, நீலம்பூர், மயிலம்பட்டி, அரசூர், கணியூர், கரவழி மாதப்பூர், ராசி பாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், இச்சிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை பிரித்து, கருமத்தம்பட்டி பத்திர பதிவு அலுவலகத்தை துவக்க முடிவு செய்யப்பட்டு, பழைய நகராட்சி அலுவலகத்தில், பத்திரப்பதிவு அலுவலகம் இன்று திறக்கப்படுகிறது.