/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழனி ஆண்டவர் கோவிலில் தீப கம்பம் நடும் விழா
/
பழனி ஆண்டவர் கோவிலில் தீப கம்பம் நடும் விழா
ADDED : ஆக 26, 2025 10:28 PM

அன்னுார்; சாலையூர், பழனியாண்டவர் கோவிலில் தீப கம்பம் நடப்பட்டது.
அன்னுார் அருகே சாலையூரில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் பழமையானது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு 2023 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து கோவில் முன்புறம் 20 அடி உயர தீப கம்பம் நடும் பணி நேற்று நடந்தது. முன்னதாக வேள்வி பூஜையும், பழனி ஆண்டவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.
கிரேன் வாயிலாக 20 அடி உயர தீப கம்பம் நிறுவப்பட்டு அதன் பிறகு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள பாத விநாயகருக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.