/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மசால் புற்களை தேடி வரும் மான்கள்! பயிர்களை காலி செய்வதால் கவலை
/
மசால் புற்களை தேடி வரும் மான்கள்! பயிர்களை காலி செய்வதால் கவலை
மசால் புற்களை தேடி வரும் மான்கள்! பயிர்களை காலி செய்வதால் கவலை
மசால் புற்களை தேடி வரும் மான்கள்! பயிர்களை காலி செய்வதால் கவலை
ADDED : ஜூலை 13, 2025 08:50 PM
பெ.நா.பாளையம்; கோவை வடக்கு பகுதியில் வேளாண் பயிர்களை வனவிலங்குகள் தின்று அழித்து வருவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படாத நிலையில், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சில விவசாயிகள், கால்நடைகளை பராமரித்து, அதன் வாயிலாக ஓரளவு வாழ்க்கை சிரமங்களை குறைக்க போராடி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு தீவனமாக வளர்க்கப்படும் மசால் புற்களை தின்று, பசியாற வனவிலங்குகள் தொடர்ந்து படை எடுத்து இதர பயிர்களையும் அழித்து வருகின்றன. பன்னிமடை பகுதியில் நுாற்றுக்கணக்கான மான்கள், மசால் புற்களை தினந்தோறும் மேய்ந்து, விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறது.
பிரச்னைக்கு தீர்வு காண வனப்பகுதிகளிலேயே வனவிலங்குகள் அதிகம் உண்ணும் மசால் புற்கள், சிறு செடிகள், பழ மரங்கள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். வன எல்லையில், சோலார் ஆழ்குழாய் கிணறு அமைத்து, தண்ணீர் தொட்டிகளை உருவாக்கி வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்கச் செய்தால், விலங்குகள் நடமாட்டம், விவசாய நிலங்களில் கட்டுப்பட வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு கடுமையான விதிமுறைகளுடன் பயிர் இழப்பீட்டு தொகை தருகின்றனர். இதற்கு மாற்றாக, வனவிலங்குகளை வன எல்லையை தாண்டாமல், உணவு அளித்து பராமரிப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும். இதை அரசு, ஏற்று, நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.