/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகர்ப்புற நில ஆவணங்களில் குறைபாடு: காங்., கோரிக்கை
/
நகர்ப்புற நில ஆவணங்களில் குறைபாடு: காங்., கோரிக்கை
நகர்ப்புற நில ஆவணங்களில் குறைபாடு: காங்., கோரிக்கை
நகர்ப்புற நில ஆவணங்களில் குறைபாடு: காங்., கோரிக்கை
ADDED : அக் 09, 2024 10:37 PM
பெ.நா.பாளையம் : நகர்புற நில ஆவணங்கள் பல்வேறு குறைகளுடன் பதிவு செய்யப்படுகிறது. அதை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்ட காங்., துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள மனுவில், கோவை மாநகராட்சி உடன் இணைந்த கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள, 16, 17, 33, 34, 35வது வார்டுக்கு உட்பட்ட வருவாய் ஆவணங்களான பட்டா, சிட்டா, வரைபடம் ஆகியவை டி.எஸ்.எல்.ஆர் என்ற நகர்புற நில ஆவணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாற்றம் செய்யப்பட்ட போது, நில உரிமையாளர்கள் அனைவரிடமும் ஆவணங்கள் பெறப்பட்டு, அளவீடு செய்து, பதிவேற்றம் செய்யப்பட்டன.
புதிதாக உருவாக்கப்பட்ட டவுன் சர்வே லேண்ட் ரிஜிஸ்டர் எனப்படும் டி.எஸ்.எல்.ஆர்., ஆவணத்தில் உரிமையாளர் பெயர்கள் பல்வேறு குறைபாடுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த பெயர்களுடன், வேறு பெயர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரு சில ஆவணங்களில் உரிமையாளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
பழைய வருவாய் ஆவணங்களில் உள்ள வரைபட அளவுகள் குறைவாக பதியப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மேற்படி குறைபாடுகள் சம்பந்தமாக மனு அளித்தால், மனு மீது நடவடிக்கை எடுக்க மாத கணக்கில் ஆகிறது. எனவே நகர்ப்புற நில ஆவணத்தில் திருத்தம் செய்ய பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி, திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.