/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பணியில் சேவை குறைபாடு; ரூ. 1 லட்சம் இழப்பீட்டுக்கு உத்தரவு

ADDED : டிச 20, 2024 11:43 PM
கோவை; கோவை, தொப்பம்பட்டியை சேர்ந்த மகாஸ்ரீ என்பவர், மதுக்கரையிலுள்ள 'கிரீன் நெஸ்ட் பிராப்பர்ட்டி' என்ற கட்டுமான நிறுவனத்திடம், 1,650 சதுர அடியில், வீடு கட்ட மனையுடன் சேர்த்து, 40.8 லட்சம் ரூபாய்க்கு, ஒப்பந்தம் செய்தார்.
வீடு கட்டி மகாஸ்ரீயிடம் ஒப்படைத்த போது, கட்டுமான பணி தரமாக இல்லாதது தெரிய வந்தது. ஒப்பந்தம் செய்தபடி, கட்டுமான பொருட்களை பயன்படுத்தாமல், தரம் குறைந்த பொருட்களை வைத்து கட்டி, பணிகளை முழுமையாக முடிக்காமல் ஒப்படைத்தனர்.
இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு இழப்பீடாக, ஒரு லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.