/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரை கட்ட தாமதம்; பொதுமக்கள் அதிருப்தி
/
நிழற்கூரை கட்ட தாமதம்; பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜன 03, 2024 11:50 PM
வால்பாறை : பயணியர் நிழற்கூரை கட்ட, வால்பாறை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மக்கள்அதிருப்தியடைந்துள்ளனர்.
வால்பாறை நகரில், நகராட்சி அலுவலகம் முன் கடந்த பல ஆண்டுகளாக பயணியர் நிழற்கூரை இருந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பயணியர், நிழற்கூரையை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நகராட்சி அலுவலக விரிவாக்க பணியின் போது, பயணியர் நிழற்கூரை இடிக்கப்பட்டது. இதனால், நாள் தோறும் பள்ளி மாணவர்களும், பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'பயணியர் நிழற்கூரை இடிக்கப்பட்டதால், மழையிலும், வெயிலிலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
இதை தவிர்க்க, நகராட்சி சார்பில் அதே இடத்தில் நவீன முறையில் பயணியர் நிழற்கூரையை உடனடியாக கட்ட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நகராட்சி அலுவலம் முன்புறம் பயணியர் நிழற்கூரை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.