தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'லிப்ட்' அமைக்க தாமதம்; இழப்பீடு வழங்க உத்தரவு

'லிப்ட்' அமைக்க தாமதம்; இழப்பீடு வழங்க உத்தரவு

'லிப்ட்' அமைக்க தாமதம்; இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : மார் 31, 2025 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 10:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; 'லிப்ட்' அமைக்க முன்பணம் பெற்றுக்கொண்டு தாமதம் செய்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை, திருமால் நகரை சேர்ந்த ரவிசங்கர் என்பவர், வீட்டில் முதல் மாடிக்கு செல்வதற்காக, 'லிப்ட்' அமைக்க முடிவு செய்து, சென்னை அடையாறிலுள்ள எலைட் எலிவேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

18 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். இதற்கு ஒப்புக்கொண்டு, முன்பணமாக 4.25 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால், 'லிப்ட்' அமைக்காமல் காலம் கடத்தி வந்தனர். முன்பணத்தை திருப்பி கேட்ட போது இழுத்தடிப்பு செய்தனர். இதனால் பணத்தை திருப்பிதர உத்தரவிடவும், இழப்பீடு கோரியும், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'லிப்ட் நிறுவனம் முன்பணமாக பெற்ற, 4.25 லட்சம் ரூபாயை, ஒன்பது சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்துவதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு, 5 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு வழங்கவேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us