ADDED : நவ 20, 2025 02:47 AM
போத்தனூர்: மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில், ஆழியாறு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை அல்லது இரு முறை இரண்டு மணி நேரம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர், பின், 10 நாட்களாக மாறியது.
தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை ஒன்றரை மணி நேரம் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, எட்டு முதல், 11 நாட்களுக்கு ஒருமுறையே சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் எப்போது வரும் என தெரியாத நிலையில், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'கடந்த ஒன்பது நாட்களாக பில்லூர் குடிநீர் வினியோகம், 80 வார்டுகளில் பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, ஆழியாறு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
இதுவே பிற பகுதிகளில் தாமதமாக சப்ளை செய்ய கா ரணமானது. தற்போது பில்லூர் நீர் சப்ளை துவங்கிவிட்டது. இனி வழக்கம்போல் ஏழு - எட்டு நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படும்' என்றார்.
