/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெல்லி பப்ளிக் பள்ளி மகளிர் அணி வெற்றி
/
டெல்லி பப்ளிக் பள்ளி மகளிர் அணி வெற்றி
ADDED : ஆக 14, 2025 08:45 PM

மேட்டுப்பாளையம்; கல்லாறில் நடைபெற்று வரும் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஐதராபாத் டெல்லி பப்ளிக் பள்ளி மாணவியர் அணி வெற்றி பெற்றுள்ளது.
மேட்டுப்பாளையம் கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், சி.பி.எஸ்.இ., தெற்கு மண்டலம் 1, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று லீக் முறையில் போட்டிகள் நடந்தன.
இதில்,14 வயது மாணவிகளுக்கான போட்டியில், நெய்வேலி ஜவகர் பள்ளியும், அரியலூர் ராம்கோ வித்யா மந்திர் பள்ளியும் மோதின. இதில் நெய்வேலி ஜவகர் பள்ளி, 4 கோல்களை அடித்து வெற்றி பெற்றது. 14 வயது மாணவர்களுக்கான போட்டியில் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியும், அரியலூர் ராம்கோ வித்யா மந்திர் பள்ளியும் மோதின. இதில் சச்சிதானந்த பள்ளி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.
17 வயது மாணவர்கள் போட்டியில் நெய்வேலி ஜவகர் பள்ளியும், ஈரோடு ஷாகர் பள்ளியும் மோதின. இதில் ஈரோடு ஷாகர் பள்ளி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
17 வயது மாணவியர் போட்டியில் மதுரை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியும், ஹைதராபாத் டெல்லி பப்ளிக் பள்ளியும் மோதின. இதில் டெல்லி பப்ளிக் பள்ளி ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.
19 வயது மாணவர் போட்டியில் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியும், கோவை சுகுணா பள்ளியும் மோதின. இதில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி இரண்டு கோல்களை அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.