தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுவையான பாதுஷா

சுவையான பாதுஷா

சுவையான பாதுஷா


ADDED : பிப் 04, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2024 02:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையானபொருட்கள்:

n மைதா- ஒன்றரைகப் n வெண்ணெய்- அரைகப்

n சர்க்கரை- கால் ஸ்பூன்

n பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

n தயிர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

n எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பாகு செய்ய: n சர்க்கரை- அரைகப்n தண்ணீர் - அரை கப் n எலுமிச்சை சாறு - ஒருஸ்பூன்

செய்முறை: மைதா, பேக்கிங் சோடாவை கலந்து சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும். மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும். குறைந்தது, 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.

பின், விரும்பிய அளவுகளில் உருண்டையாக எடுத்து ஓரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டி கட்டை விரலால் குழிபோல் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைக்கவும். மாவை சிறிது கிள்ளி போட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது, எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும். பாதுஷா மேலே எழும்பி வரும்போது மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து சிறு தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் இரண்டு நிமிடங்கள் போட்டு எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us