/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுவையான சிறுதானியம், சூப்!
/
சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுவையான சிறுதானியம், சூப்!
சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுவையான சிறுதானியம், சூப்!
சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுவையான சிறுதானியம், சூப்!
ADDED : பிப் 07, 2024 01:39 AM
கோவை;மாநகராட்சி பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் துவக்கம், உயர்நிலை, நடுநிலை, மேல்நிலை என, 84 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
வரும் மார்ச்-ஏப்., மாதங்களில் பொதுத் தேர்வு எதிர்கொள்ள தயார் செய்யும் பொருட்டு, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்த வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறுதானியம், சூப் என தினமும் ஒரு வகையான சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வி.எச்., ரோட்டில் உள்ள சிட்டி பள்ளியில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, கல்விக் குழு தலைவர் மாலதி துவக்கிவைத்தார்.
படிக்கும் சமயத்தில் பசியால் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக, 5,430 மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் முன்பே வழங்கப்படுகின்றன.

