/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஸ்துார் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
/
மஸ்துார் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
மஸ்துார் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
மஸ்துார் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
ADDED : ஆக 18, 2025 09:20 PM
சூலுார்; 'கோவை மாவட்டத்தில் பணியாற்றும் மஸ்துார் பணியாளர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,' என, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடாஜலம், மாவட்ட சுகாதார அலுவலருக்கு அனுப்பிய மனு விபரம்:
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு பணிகள், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல், அழித்தல் உள்ளிட்ட பணிகளில் ஏராளமான மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, ஊதியமாக, 350 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஒரு நாள் ஊதியமாக, 600 ரூபாயும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 599 ரூபாயும் வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டத்தை காட்டிலும் ஊதியம் குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் பணியாளர்களின் வாழ்வாதாரத்துக்கு அந்த ஊதியம் போதுமானதாக இல்லை. அதனால், ஊதியத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.