/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆன்லைன்' பட்டாசுக்கு தடை விதிக்க கோரிக்கை
/
'ஆன்லைன்' பட்டாசுக்கு தடை விதிக்க கோரிக்கை
ADDED : அக் 14, 2024 09:29 PM
கோவை: 'ஆன்லைன்' பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும்' என, கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சங்க தலைவர் சின்னுசாமி கூறியதாவது: ஆன்லைனில் பட்டாசு வாங்க விற்க,கோர்ட் தடைவிதித்துள்ளது. இருந்தும் விற்பனை நடக்கிறது.
இதில், தரமற்ற. காலாவதியான பட்டாசுவிற்கப்படக்கூடும் என்பதால், விபத்து அபாயம் உள்ளது. ஆன்லைன் விற்பனையால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே 'ஆன்லைன்' விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.
விபத்து இல்லாத தீபாவளியை,அனைவரும் கொண்டாட வேண்டும். பட்டாசுக் கடைக்கான உரிமத்தை 15 நாட்களுக்கு முன் வழங்கினால், விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும். பட்டாசு வெடிப்பதற்கு, காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம்அனுமதிவழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.