/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோழிப்பண்ணையை இடிக்க உத்தரவு நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தல்
/
கோழிப்பண்ணையை இடிக்க உத்தரவு நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தல்
கோழிப்பண்ணையை இடிக்க உத்தரவு நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தல்
கோழிப்பண்ணையை இடிக்க உத்தரவு நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : ஆக 18, 2025 09:15 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, ராமபட்டிணம் ஊராட்சி கோழி பண்ணை உரிமையாளர்கள், தாசில்தார் வாசுதேவனிடம் நேற்று மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
ராமபட்டிணம் ஊராட்சியில், தற்காலிக கட்டுமான அமைப்பில் தகரக்கூரை வேய்ந்த கொட்டகை அமைத்து, ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் ஒரு பகுதியாகவும், கறிக்கோழி வளர்ப்பிலும் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
விவசாய பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் தரமான கோழி எரு உற்பத்திசெய்வது தொழிலாக உள்ளது.
இப்பண்ணையின் கட்டுமானம், ஆழமான அஸ்திவாரம் தோண்டி கான்கிரீட் துாண்கள், வெளிப்புற சுற்றுச்சுவர், உட்புற சுவர்கள் கட்டி அதன் மீது கான்கிரீட் கூரை என, நிரந்தர கட்டுமான ஏற்படுத்தவில்லை.
வார்ப்பு நிலையங்களில் தயார் நிலையில் உள்ள சிமென்ட் கால்களை நட்டு வெளிப்புற சுற்றுச்சுவரின் மேற்கூரை மட்டும் தகரத்தால் வேயப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வட்டார வளர்ச்சி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில், 30 நாட்களுக்குள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையை அகற்ற உத்தரவிட்டுள்ளார். தீர விசாரணை நடத்தாமல் உத்தரவிட்டதாக தெரிகிறது.
அவ்வாறு அகற்றினால், ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். அதனால், நோட்டீசை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.