/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை மாற்றம் செய்ய வலியுறுத்தல்
/
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை மாற்றம் செய்ய வலியுறுத்தல்
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை மாற்றம் செய்ய வலியுறுத்தல்
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை மாற்றம் செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2025 09:35 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பணியாற்றும் ஸ்டேஷன் மாஸ்டரை மாற்றம் செய்ய வேண்டும், என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு, நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில்வே ஸ்டேஷனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருப்பதால், அவரிடம் பயணியர் டிக்கெட் கேட்டு பெறுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
இதனால், டிக்கெட் வாங்குபவர்கள் வரிசையில் நீண்ட நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்தவர்கள் பலர் எளிமையாக டிக்கெட் பெற்று சென்றாலும், பொதுமக்கள் சிலர் டிக்கெட் பெறுவதில், ஹிந்தி தெரியாததாலும், ஸ்டேஷன் மாஸ்டருக்கு தமிழ் தெரியாததாலும் காலதாமதம் ஏற்படுவதுடன், மொழி புரியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, ரயில் பயணியர் நலன் கருதி, தமிழ் தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டரை கிணத்துக்கடவுக்கு நியமிக்க வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

