/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெருநாய்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த கோரிக்கை
/
தெருநாய்கள் நடமாட்டம் கட்டுப்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 21, 2024 11:13 PM
வால்பாறை;வால்பாறை நகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால், பொதுமக்கள் நிம்மதியிழந்து உள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் வால்பாறையில், ரோட்டில் நடமாடும் நாய்கள் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டுகின்றன. இதனால் விபத்து ஏற்படுகிறது.
வால்பாறை நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், வீதியில் சுற்றும் தெருநாய்களால், மக்கள் அலறியடித்து ஒட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில், இறைச்சிக்கழிவு மற்றும் உணவு கழிவுகளை திறந்த வெளியில் வீசுகின்றனர். இதனால், தெருநாய்கள் ரோட்டில் சண்டையிடுவதுடன், வாகனங்களில் செல்வோரையும் விரட்டுகின்றன.
இதனால், போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.