/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த கோரிக்கை
/
பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த கோரிக்கை
பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த கோரிக்கை
பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 09, 2025 11:19 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில், அரசால் சுத்திகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க, சுத்திகரிப்பு கருவிகள் கிடையாது. சில பள்ளிகளில், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில், தண்ணீர் வாயிலாக பெரும்பாலான நோய்கள் பரவுவதால், மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப போதிய மின் மோட்டார்கள் அமைத்தும், முறையான இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால், பள்ளிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அதில், குளோரின் அளவு மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை மாணவர்கள் பருகுகின்றனர்.
சிலர் மட்டுமே வீட்டில் இருந்து குடிநீர் பாட்டில் எடுத்து வருகின்றனர். குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்பு வாயிலாக, நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது மட்டுமே மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். பள்ளிகள் தோறும், குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பை உருவாக்க அரசு நடவடிக்கை அவசியமாகும்.
இவ்வாறு, கூறினர்.

