/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை
/
அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை
ADDED : அக் 13, 2024 10:05 PM
வால்பாறை : வால்பாறையில், கோவில் அன்னதானம் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தினமும், 50 பக்தர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அன்னதான திட்டம், பாதியாக குறைக்கப்பட்டு, 25 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், 'வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அன்னதான திட்டத்தில், 50 பக்தர்கள் பயன்பெற்று வந்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 25 பேருக்கு மட்டுமே 'டோக்கன்' வழங்கப்படுகிறது.
இதனால், பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோவிலில் வழக்கம் போல், 50 பக்தர்களுக்கு அன்னதான திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.