/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்து, குற்றங்களை தடுக்க கேமரா அரசு பஸ்களில் பொருத்த கோரிக்கை
/
விபத்து, குற்றங்களை தடுக்க கேமரா அரசு பஸ்களில் பொருத்த கோரிக்கை
விபத்து, குற்றங்களை தடுக்க கேமரா அரசு பஸ்களில் பொருத்த கோரிக்கை
விபத்து, குற்றங்களை தடுக்க கேமரா அரசு பஸ்களில் பொருத்த கோரிக்கை
ADDED : ஆக 22, 2025 11:33 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, புறநகர் மற்றும் உள்ளூர் வழித்தடங்களில், தினமும், 187 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் பல்வேறு புதிய அம்சங்கள் அமல்படுத்தப்பட்டும் வருகின்றன.
தானியங்கி கதவு, பக்கவாட்டில் தடுப்புச் சட்டம் (அண்டர் ரன் புரொடெக்டர் ஷீட்) உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், பெருநகரங்களைப் போல, பஸ்களில் ரிவர்ஸ் கேமரா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. எனவே, டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பஸ்சின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை எழுந்துள்ளது.
டிரைவர்கள், கண்டக்டர்கள் கூறியதாவது:
புதிதாக இயக்கப்படும் பஸ்சில், கண்காணிப்பு கேமரா உள்ளது. இதேபோல, அனைத்து பஸ்களிலும் 'ரிவர்ஸ்' மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 'ரிவர்ஸ்' கேமரா பொருத்துவதன் வாயிலாக, பின்னால் வரும் வாகனங்களை, எளிதில் அறிந்து பஸ்சை இயக்க முடியும்.
இதேபோல, பஸ்சின் உள்ளே கேமரா பொருத்தப்படும்போது, திருவிழாக்காலங்களில் கூட்ட நெரிசலில் செயின்பறிப்பு, பர்ஸ் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை எளிதில் கண்டறிய முடியும். பயணியரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். துறை ரீதியான அதிகாரிகள், புறநகரங்களில் இயக்கப்படும் பஸ்களின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.