/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை வார்டுகளில் பாதுகாப்பில்லை; இரும்பு கிரில் அமைக்க கோரிக்கை
/
அரசு மருத்துவமனை வார்டுகளில் பாதுகாப்பில்லை; இரும்பு கிரில் அமைக்க கோரிக்கை
அரசு மருத்துவமனை வார்டுகளில் பாதுகாப்பில்லை; இரும்பு கிரில் அமைக்க கோரிக்கை
அரசு மருத்துவமனை வார்டுகளில் பாதுகாப்பில்லை; இரும்பு கிரில் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 26, 2025 08:47 PM
பொள்ளாச்சி: அரசு மருத்துவமனைகளில், டாக்டர், செவிலியர் உள்ளிட்டோர் பணிபுரியும் முக்கிய வார்டுகளில் 'இரும்பு கிரில்' அமைத்து, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மற்றும் பல்வேறு தரப்பு மக்கள், சிகிச்சைக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர்.
அவ்வகையில், அரசு மருத்துவக் கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகளில், பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், புறக்காவல் நிலையம் அமைத்தும், காவலாளிகளை நியமித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், சிகிச்சை நிலைக்கு ஏற்ப பொறுமை காத்துக் கொள்ளாமல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.
டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்வதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் முற்படுகின்றனர்.
சமீபத்தில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பணியில் இருந்த பயிற்சி டாக்டரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், அரசு மருத்துமனைகளில், இத்தகைய பிரச்னை தொடர்கதையாகி வருகிறது.
இதனால், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில், மருத்துவ பணியாளர்களை உள்ளடக்கிய வார்டுகளில், அவர்கள் பணிபுரியும் இடத்தைச் சுற்றி 'இரும்பு கிரில்' அமைத்து, பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில், போதிய எண்ணிக்கையில் காவலாளிகள் கிடையாது. அவர்கள், நுழைவு வாயில் பகுதியிலேயே பணியில் இருப்பர்.
ஏதேனும் ஒரு பிரச்னை என்றால், அவர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைப்பதிலும், சிரமம் ஏற்படுகிறது.
எனவே, டாக்டர்கள், செவிவிலியர்கள், மருத்துவ பணியார்களை உள்ளடக்கிய வார்டுகளில், பணிபுரியும் இடத்தைச் சுற்றி 'இரும்பு கிரில்' அமைக்க வேண்டும். அசாதாரண சூழல் நிலவும்போது பணியில் உள்ளவர்கள், தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

