/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆஷா' பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை
/
'ஆஷா' பணியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை
ADDED : மே 17, 2025 04:19 AM
வால்பாறை : அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'ஆஷா' பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, ஏ.ஐ.டி.யு.சி., கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை தாலுகா ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க தாலுகா செயலாளர் மோகன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ், 45 'ஆஷா' பணியாளர்கள் விடுப்பின்றி, 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சுகாதார திட்டங்களை அமுல்படுத்துவதில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா தொற்று காலத்தில் கூட முன்களப்பணியாளர்களாக இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். சுகாதாரத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் 'ஆஷா' பணியாளர்கள் கடந்த, 16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதசம்பளமாக, தற்போது 5,750 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
கிராமப்புற செவிலியர்களுக்கு, நிகராக பணியாற்றி வரும் 'ஆஷா' பணியாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இவர்களுக்கு மாதசம்பளமாக, 26 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.