/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பை அகற்றி தார் ரோடு அமைத்து தர கோரிக்கை
/
ஆக்கிரமிப்பை அகற்றி தார் ரோடு அமைத்து தர கோரிக்கை
ADDED : ஜன 14, 2025 06:32 AM

கருமத்தம்பட்டி; ஆக்கிரமிப்பை அகற்றி தார் ரோடு அமைத்து தர கோரி, கணியூரில் வீடுகளில் கருப்பு ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கணியூர் ஊராட்சிக்குட்பட்டது பெருமாள் கோவில் தெரு. இத்தெருவில், 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள நகர்களை சேர்ந்த மக்களும் இந்த தெருவை பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தெருவில் தார் ரோடு போடப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலானதால், கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்க மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, புதிதாக ரோடு போட நிர்வாக அனுமதி கிடைத்தது. அந்த தெருவில் இருந்த சாய்வு தளம், சலவை கற்கள் அகற்றப்பட்டு பணிகள் துவங்கின. ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவரது இடம் அளவீடு செய்யப்பட்டது. அதில், அவர் ரோட்டை ஆக்கிரமித்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனாலும், ரோடு போடும் பணிகள் தொடர்ந்து நடக்கவில்லை. இதனால், அத்தெரு மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பை அகற்றி, உடனடியாக தார் ரோடு அமைத்து தர கோரி, முதல்வரின் தனிப் பிரிவுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

