/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
/
கோவை - தாம்பரம் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2025 07:32 PM
கிணத்துக்கடவு; கோவை, போத்தனூர் -- -தாம்பரம் இடையே, பொள்ளாச்சி வழியாக இயக்கிய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்களில் பயணிக்க கூட்டம் அதிகளவு இருக்கும்.
இதில், கோவை, போத்தனூர் - தாம்பரம் ரயில் (06186) கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழித்தடத்தில், கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இதனால், ரயில் பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். பயணியர் பஸ் பயணத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, ரயில் பயணியர் நலன் கருதி, இந்த வாராந்திர ரயிலை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக மீண்டும் இயக்க வேண்டும், என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
ரயில் பயணியர் கூறியதாவது:
பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - கோவை - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் ரயில் இயக்க வேண்டும். கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில்களை பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக இயக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில், போத்தனுார் - தாம்பரம் வாராந்திர ரயிலை, தினசரி ரயிலாக இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.