/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காஸ் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை
/
காஸ் விலை உயர்வை திரும்ப பெற கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : காஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என, தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க.,) வலியுறுத்தினர்.
த.வெ.க., சார்பில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்வு கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு ஏழை, எளிய மக்கள் மற்றும் குடும்ப பெண்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கூறி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர மாவட்ட செயலாளர் சம்பத் குமார் தலைமை வகித்தார்.