/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டட இடிப்பு என்பது ஒரு கலை பணியில் தேவை முன்னெச்சரிக்கை
/
கட்டட இடிப்பு என்பது ஒரு கலை பணியில் தேவை முன்னெச்சரிக்கை
கட்டட இடிப்பு என்பது ஒரு கலை பணியில் தேவை முன்னெச்சரிக்கை
கட்டட இடிப்பு என்பது ஒரு கலை பணியில் தேவை முன்னெச்சரிக்கை
ADDED : ஜன 03, 2026 05:27 AM

ப ழைய கட்டடத்தை, மேலும் சில காலங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் அவற்றை இடிக்கிறோம். புதிய கட்டடம் கட்டுகிறோம்.
கட்டுமான முறையில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யமுடியாத பட்சத்திலும், இருக்கும் கட்டடத்தை விரிவுபடுத்த முடியாத சூழலிலும் கட்டடத்தை இடிப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இச்சூழலில், ஒரு கட்டுமான பொறியாளரிடம் கட்டட இடிப்பு குறித்து விரிவான அறிவை பெற வேண்டும்.
பொதுவாக கட்டடம் இடிப்பு பணியில் ஆட்கள் தவறி விழுதல், இடிக்கப்படும் பொருட்கள் கீழே உள்ளவர்கள் மீது விழுதல், மின் இணைப்பை கவனிக்காமல் வேலை செய்தல், திடீரென பரவும் தீ, மேலே துாக்கும் இயந்திரங்கள் பழுதடைந்து கீழே விழுவதாலும், விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, கட்டடம் இடிக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இடித்து தள்ளும் பணியில் பல வேலையாட்கள், வேலையின் தன்மையை அறியாமல் இருப்பார்கள்.
இவர்களுக்கு பணி தொடர்பான விபரங்களை, 'கைடு'(வழிகாட்டி) சொல்ல வேண்டும். இடிப்பு பணியில் திறமையானவர்களாக மட்டுமின்றி, அனைத்து கட்டுமான பணியிலும் திறமையானவரை மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும்.
இடிக்கப்படும் சொத்துக்களின் வரைபடம் இல்லையேல், மேற்பார்வையாளர் தன் சொந்த 'சர்வே' வாயிலாக இடிக்க வேண்டிய சொத்துக்களை தீர்மானிக்க வேண்டும். மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவற்றை அந்தந்த துறைகளில், அனுபவம் உள்ளவர்களை கொண்டு துண்டிக்க வேண்டும்.
இடிப்பு பணியின்போது கீழே வேலி அமைத்து, யாரும் நுழையாத வகையில் தடை விதிக்க வேண்டும். தேவைக்கேற்ப ஹெல்மெட், பாதுகாப்பு பெல்ட், கிளவுஸ் போன்றவற்றை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
ஆபத்தை குறிக்கும் வகையில் பாதுகாப்பு பலகை வைக்க வேண்டும் என்கின்றனர் பொறியாளர்கள்.

