/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜி பிளஸ் ஒன்' முறை வீடு கட்டுமானம் சிறந்ததா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறியாளர்
/
'ஜி பிளஸ் ஒன்' முறை வீடு கட்டுமானம் சிறந்ததா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறியாளர்
'ஜி பிளஸ் ஒன்' முறை வீடு கட்டுமானம் சிறந்ததா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறியாளர்
'ஜி பிளஸ் ஒன்' முறை வீடு கட்டுமானம் சிறந்ததா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொறியாளர்
ADDED : ஜன 03, 2026 05:26 AM

சாதாரணமாக ஒரு வீட்டை 'ஜி பிளஸ் ஒன்' என்ற முறையில் வீடு கட்டுதல் சிறந்த முறையா? அல்லது பேஸ்மென்ட்டிற்கு பதிலாக 'ஸ்டில்டு பிளஸ் ஒன்' என்ற முறையில் வீடு கட்டுதல் சிறந்த முறையா? அல்லது பேஸ்மென்ட்டிற்கு பதிலாக ஸ்டில்டு பிளஸ் ஒன்று(கீழே காலியிடம் பார்க்கிங்) என்ற முறையில் வீடு கட்டுதல் சிறந்த முறையா என்பதை விளக்கவும்.: - ராஜிவ்: பெரும்பாலும் 'ஜி பிளஸ்' போன்ற அமைப்புதான் சிறந்தது. 'கார் பார்க்கிங்' என்பது அந்த இடத்தினை உடைய உத்தேச சூழ்நிலையை பொறுத்து நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். கார் பார்க்கிங் என்று நிறைய இடம் விடுவது என்பது, அபார்ட்மென்ட்களுக்கு பொருந்தாது. வீடுகளுக்கு அது தேவையில்லை.
சாதாரண வீடுகளுக்கு 'ஜி பிளஸ் ஒன்' ஒன்றுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். அவற்றை வரைபடம் தயாரிக்கும் போது அதிக வாகனங்கள் நிறுத்துமாறும், செலவினங்கள் குறைவாக இருக்குமாறும் பார்த்துக்கொண்டால் இடத்தின் அளவு வீணாகாது.
நல்ல அனுபவம் உள்ள பொறியாளர்களை வைத்து நீங்கள் திட்டமிடும் போது, நினைக்கும் அளவிற்கு வாகனங்கள் நிறுத்துவதற்கும், வீட்டிற்கும் போதுமான பிளான் அமையும். எனவே, ஜி பிளஸ் ஒன் முறைதான் சிறந்தது.
தனி வீட்டை பொறுத்தவரை நீங்கள் சொந்தமாக தொழிலகக்கூடத்தை கீழ் தளத்தில் நிறுவாத பட்சத்தில், ஜி பிளஸ் ஒன் கட்டுமானமே சிக்கனமானது.
கலவை மேற்பூச்சுக்கு ஜிப்சம் மாற்று பூச்சு என இருந்த நிலையில் தற்போது புதிதாக 'பாலிமர் மோர்டார்' பூச்சு வந்திருப்பதாக சொல்கிறார்களே. இது ஒட்டுமொத்த சுவர் மேற்பூச்சுக்கானதா? அல்லது விரிசல்: - சுப்புராஜ்: இன்றுள்ள வெளிச்சந்தையில் 'சிந்தெடிக் பைபர்' உறுதியூட்டிகள்(6 மி.மீ., 6 மி.மீ., 10 மி.மீ., 12 மி.மீ.,) என்ற அளவுகளில் கிடைப்பதாக தெரியவில்லை. ஆனால், கான்கிரீட் வலிமைப்படுத்த சிந்தெடிக் பைபர்ஸ் என்ற செயற்கை இழை பொருட்கள் பல்வேறு வகையான விசைகளை தாங்குவதற்கு, 'ஜியோ சிந்தெடிக்ஸ்' ஜியோ டெக்ஸ்டைல்ஸ் என்ற வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
கட்டுமானத்துறையில் செயற்தை இழை உறுதியூட்டிகள் ஒரு சிறந்த மாற்றுப்பொருளாக உள்ளது; விலையும் குறைவு. புதிதாக வெளிச்சந்தையில் கிடைக்கும் பூச்சு கலவை, ஒட்டுமொத்த சுவர் மேற்பூச்சுக்கானது அல்ல. விரிசல் மற்றும் வெடிப்புகளை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பூச்சு கலவையாகும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் வீடு கட்ட உள்ளேன். எனவே: - சபரீஷ்: கட்டுமான துறை சார்ந்த வெளியீடுகள், இதழ்கள் அதிகம் கிடைக்கின்றன. தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் நடத்தும் தொழில்நுட்பக் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகளில் பங்கேற்று அறிந்துகொள்ளலாம். பொறியியல் தொழில்நுட்ப புத்தகங்கள், இணையதளங்களையும் பார்வையிடலாம்.
தற்போது குளிர் காலம் என்பதால் கான்கிரீட் பிணைப்பு உள்ளிட்டவை தாமதமாகும் என்கிறார்களே. இந்த சமயத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ஏதேனும் உள்ளனவா?: -ருக்மணி: குளிர்காலங்களில் கான்கிரீட் இட்ட பிறகு நாம் கவனமாக இருக்க வேண்டும். அதாவது கட்டடங்களுக்கு நீராற்றுவதிலும், முட்டுப்பலகைகளை பிரிப்பதிலும் கவனம் தேவை. கான்கிரீட் இட்ட பிறகு அதன் ஈரத்தன்மையை சோதிக்க வேண்டும்.
அதன் மேற்பரப்பில் வந்து நிற்கும் தண்ணீரின் தன்மையை பொறுத்து, நாம் கியூரிங் வேலைகள் துவங்க வேண்டும். குளிர் காலத்தில் நீராற்றுதலை சற்று தாமதமாகத்தான் துவங்க வேண்டும். அதேபோல் முட்டுக்கட்டைகளை பிரித்தெடுக்கவும் அவசரம் கூடாது.
-மாரிமுத்துராஜ்: உறுப்பினர்: கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் (கொசினா):

