/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 03, 2026 05:25 AM
கோவை: கலெக்டர் பவன்குமார் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
'கோவை திருச்சி சாலை சுங்கம், லங்கா கார்னர் சந்திப்பு, தடாகம் சாலை வெங்கிட்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை, விரைவாக முடித்து சாலையையும், போக்குவரத்தையும் சீரமைக்க வேண்டும். சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் முதல் பீட்பள்ளம் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.
நுகர்வோர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் விபத்தையும், உயிர்பலியையும் குறைக்க பல்வேறு ஆலோசனைகளை கூறினர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி., நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

