/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடிக்கப்பட்ட 10 ஓட்டுச்சாவடிகள் அதே மையத்தில் இடமாற்றம்!
/
இடிக்கப்பட்ட 10 ஓட்டுச்சாவடிகள் அதே மையத்தில் இடமாற்றம்!
இடிக்கப்பட்ட 10 ஓட்டுச்சாவடிகள் அதே மையத்தில் இடமாற்றம்!
இடிக்கப்பட்ட 10 ஓட்டுச்சாவடிகள் அதே மையத்தில் இடமாற்றம்!
ADDED : மார் 09, 2024 07:37 AM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி தொகுதியில் பழுதடைந்த மற்றும் பராமரிக்காத ஓட்டுச்சாவடிகள், அதே வளாகத்தில் மாற்று கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது,' என, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, பொதுமக்களிடம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் குழுவினர், பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொத்தம், 269 ஓட்டுச்சாவடி மையங்களில், கழிப்பிடம், குடிநீர், சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.இந்நிலையில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுச்சாவடிகளை மாற்றம் செய்வது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சப் - கலெக்டர் தலைமை வகித்து பேசுகையில், ''பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 100 சதவீதம் தணிக்கை செய்யப்பட்டது. அதில், பழுதடைந்த மற்றும் இடிக்கப்பட்ட, 10 ஓட்டுச் சாவடிகள், அதே மைய வளாகத்தில் மற்றொரு கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
அரசியல் கட்சி பிரமுகர்கள், சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார் ஜெயசித்ரா, துணை தாசில்தார் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

