/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் கட்டமைப்பு இடிப்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
/
பஸ் ஸ்டாண்டில் கட்டமைப்பு இடிப்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
பஸ் ஸ்டாண்டில் கட்டமைப்பு இடிப்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
பஸ் ஸ்டாண்டில் கட்டமைப்பு இடிப்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
ADDED : பிப் 16, 2024 11:38 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், பழநி, திருப்பூர் பஸ்கள் நிறுத்தம் அருகே பயணியர் காத்திருப்பு பகுதி கட்டடம் இடிக்கும் பணி நடக்கிறது.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, பழநி, திருப்பூர் வெளியூர் பஸ்களும், நெகமம் வழித்தட உள்ளிட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. இதனால், பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர்.
மழை காலங்களில் இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் மேற்கூரையில், மழைநீர் தேங்கி நிற்பதால் சுவர் முழுவதும் ஈரப்பதமாக அச்சுறுத்தும் வகையில் இருப்பதால், பயணியர் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் புளியம்பட்டி பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பகுதியில் மழை நீரால் ஈரமடைந்த கான்கிரீட் சுவர் பெயர்ந்து, பஸ்சுக்காக காத்திருந்த மாணவியின் தலையில் விழுந்தது.
இதையடுத்து, மழை காலங்களில் உள்ளே பயணிகள் செல்லாத வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்புகளை தாண்டி பொதுமக்கள் அந்த கட்டடத்திலேயே காத்திருந்தனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் இருந்தது.
இக்கட்டடத்தை பராமரிக்க, பயணியர் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பராமரிப்பில்லாத கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக தற்போது, பழைய கட்டடம் இடிக்கும் பணி நேற்று துவங்கியது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பழைய பஸ் ஸ்டாண்டில் பயணியர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பராமரிப்பில்லாத கட்டடம் இடிக்கப்படுகிறது. நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும்,' என்றனர்.