/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் இருந்த கோவில் அகற்றம்; அட்வகேட் கமிஷனர் ஆய்வு
/
ரோட்டோரத்தில் இருந்த கோவில் அகற்றம்; அட்வகேட் கமிஷனர் ஆய்வு
ரோட்டோரத்தில் இருந்த கோவில் அகற்றம்; அட்வகேட் கமிஷனர் ஆய்வு
ரோட்டோரத்தில் இருந்த கோவில் அகற்றம்; அட்வகேட் கமிஷனர் ஆய்வு
ADDED : நவ 15, 2024 09:45 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, மீன்கரை ரோட்டோரத்தில் இருந்த கோவில் அகற்றப்பட்டதை, அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார்.
பொள்ளாச்சி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
கடந்த, 9ம் தேதி முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் ஸ்ரீராம் ரங்கராஜன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் சரவண செல்வம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வழக்கு தொடர்ந்த மனுதாரர் உடன் இருந்தனர்.
நேற்றுமுன்தினம், பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அட்வகேட் கமிஷனர், நேற்று மீன்கரை ரோட்டோரத்தில் இருந்த அழகு முத்துமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டதை பார்வையிட்டு உறுதி செய்தார். மேலும், பல்லடம் ரோட்டோரத்தில் உள்ள மதுரைவீரன் கோவிலை ஆய்வு செய்த போது, நகராட்சி இடத்தில் இருப்பது தெரியவந்தது. பல்லடம் ரோடு, மீன்கரை ரோடுகளில் நேற்று ஆய்வு செய்து, குறிப்பு எடுத்தார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பல முறை எச்சரிக்கை விடுத்தும், நோட்டீஸ் வழங்கியும் அகற்றாத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, இரு நாட்களாக அட்வகேட் கமிஷனர் ஆய்வு செய்தார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்து குறிப்பெடுத்துள்ளார். ஆய்வின் முடிவுகளை கோர்ட்டில் சமர்பிக்க உள்ளார்,' என்றனர்.