/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது
/
காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது
ADDED : அக் 02, 2025 10:52 PM
கோவை:புதிய நுாலகப் பணிக்காக, கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவங்கியது.
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைக்குச் சொந்தமான, 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நுாலகத்தின் நுழைவாயில் பகுதி காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் இடத்தில் அமைய உள்ளது. போலீஸ் ஸ்டேஷன் தவிர, போக்குவரத்து பிரிவு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
நுாலகத்துக்கான நுழைவாயில் அமைக்க உள்ளதால், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனை இடித்து அகற்ற திட்டமிடப்பட்டது. அங்கிருந்த மகளிர் போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து பிரிவு உள்ளிட்டவை இடம் மாற்றப்பட்டன. காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் மட்டும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்த கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன்கள் மாற்றப்பட்டதால், பழைய போலீஸ் ஸ்டேஷன் இடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து, நுழைவாயில் அமைக்கும் பணியை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.