/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் -- ஸ்கூட்டர் மோதல்: வாலிபர் பலி
/
பைக் -- ஸ்கூட்டர் மோதல்: வாலிபர் பலி
ADDED : அக் 02, 2025 10:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:கோவை, மயிலேறிபாளையம், கிருபா கார்டனை சேர்ந்தவர் மவுலீஸ்வரன், 27. நேற்று முன்தினம் மாநகரில் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். பின் வீட்டிற்கு ஸ்கூட்டரில் திரும்பிக்கொண்டிருந்தார். ஒத்தக்கால்மண்டபம் மேம்பாலத்தின் இடதுபுற சாலையில் செல்லும்போது, மலுமிச்சம்பட்டி நோக்கி வந்த பைக், ஸ்கூட்டர் மீது மோதியது.
இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் பைக்கில் வந்த சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார்புரத்தை சேர்ந்த இளவரசன், 19 உயிரிழந்திருப்பது தெரிந்தது. மவுலீஸ்வரன் புகாரில் செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.