/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த மனு
/
அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்த மனு
ADDED : அக் 02, 2025 10:53 PM
கோவை:மலுமிச்சம்பட்டி அருகே ஜே.ஜே. நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி மாணவர்கள் சார்பில், கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு:
ஜே.ஜே. நகரில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி உள்ளது. 836 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும்போது இடப்பற்றாக்குறை ஏற்படும். எங்கள் ஊராட்சியில் உள்ள, பூமிதான இயக்கத்துக்குச் சொந்தமான க.ச., எண் 536/2, 3.92 ஏக்கர் நிலத்தை, எங்கள் பள்ளிக்கு வழங்க, மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக, தமிழக அரசுக்கு விண்ணப்பித்தனர். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளதாக அறிந்தோம். அவ்விடத்தை உயர்நிலைப்பள்ளிக்கு வழங்கி, அரசு மேல்நிலைப பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.