ADDED : அக் 02, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2025-2026ம் கல்வியாண்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தரநிலை அறிக்கை அச்சிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கும் இந்த அறிக்கைகள் வழங்கப்பட்டன.
தரநிலை அறிக்கையில், மாணவர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் அவர்களின் 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படம் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, திறன் அடிப்படையிலான பிரிவுகளான மொழித்திறன்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் திறன்களில், மாணவர்களின் தற்போதைய தரநிலையை தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும்; எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.