/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்காவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அமெரிக்காவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 05, 2025 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி உயர்வை கண்டித்து, கம்யூ., கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இ.கம்யூ., மாநிலப் பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மா.கம்யூ., நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள, 50 சதவீத வரி விதிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த வரி உயர்வால் பாதிக்கப்பட்ட பனியன் மற்றும் ஜவுளி தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் அரசு பாதுக்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தனர்.