/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாமாயிலுக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்
/
பாமாயிலுக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 30, 2024 11:43 PM
அன்னுார் ; பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெலுங்கு பாளையத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, கட்சி சார்பற்ற, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் பேசுகையில்,பாமாயில் அதிகமாக பயன்படுத்தினால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்ன மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென்னை விவசாயிகள் பலர் தேங்காய் விலை கட்டுபடியாகாமல் தங்களது நிலத்தை ரியல் எஸ்டேட் புரமோட்டோர்களுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளை காக்க மானிய விலையில் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும், என்றார் .
ஆர்ப்பாட்டத்தில் ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி, கரியாம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மனு அளிக்கப்பட்டது.