/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2024 09:51 PM
கோவை; தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விக்னேஷ், தலைவர் பிரபாகரன் ஆகியோர், கடந்த தீபாவளிக்கு முன், வாட்ஸ்- ஆப் குழு துவங்கியதற்காக, வங்கி நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சையது இப்ராஹிம் தலைமையில், தலைவர் பாட்சா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் முரளி, முன்னாள் பொதுச் செயலாளர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டோரை, உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.