ADDED : நவ 07, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சாய்பாபா கோயில் மேம்பாலப்பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி, பா.ஜ. மாநகர் மாவட்ட தலைவர் தலைமையில் நேற்று நடப் பதாக அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், திடீரென கைவிடப்பட்டது.
நீண்ட நாட்களாக நடந்து வரும் மேம்பால பணிகளை, விரைவாக முடிக்க வலியுறுத்தி, பலமுறை பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் வேண்டு கோள் விடுத்தனர்.
இது தொடர்பாக நேற்று மாலை, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பா.ஜ.வினர் அறிவித்திருந்தனர். நேற்று மாலை ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.வினர் தயாராயினர். போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதாக பா.ஜ.அறிவித்தது.

